Tuesday, 31 August 2010

மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம் : ஆய்வில் தகவல்


மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். 
இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும்.


இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக ‘மேப்பிங்’ முறையை பயன்படுத்தினர். 
அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். மேலும்

மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த மைக்கேல் ஜாக்சன் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.


உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். 
அவரது குடும்ப மருத்துவர் கனாட் முர்ரே கொடுத்த நச்சுதன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் அவர் மரணம் அடைந்தது விசாரணையில் தெரிய வந்தது.
 எனவே மருத்துவர் முர்ரே மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 3 தடவை நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் மைக்கேல் ஜாக்சன் உடல் புதைக்கப்பட்டது.
 இது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் தான் உற்சாகத்துடன் நடனம் ஆடும் வகையில் மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாகவும், அதனால்தான் அவர் மரணத்தை தழுவியதாகவும் வாதாட திட்டமிட்டுள்ளனர். மேலும்

உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி


 

உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.

என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?

ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், ‘ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, ‘ஸ்கின்புட்’ என்று பெயர். 


நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்பியூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.
 மேலும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த அனைத்து முயற்சிகளிலும் இலங்கையிடம் இந்தியா தோலிவியைத் தழுவி உள்ளது – யாழில் நிரூபமாராவிடம் பேராசிரியர் க.சிற்றம்பலம் எடுத்துரைப்பு‐ படங்கள் இணைப்பு


இந்தியாவே இலங்கையின் யுத்தத்தை முன்னின்று நடத்தியது. இந்தியாவே ஆயுதங்களை வழங்கியது. இறுதியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தவாயினும் அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமாராவிடம் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக சாடியுள்ளதாக ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இன்று யாழ் விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலருடன் இரு கட்டங்களாக சந்திப்பு நடைபெற்றுள்ளது. முதலில் கச்சேரியில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா  யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மேலும்.

நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்புக்களுக்கு கஞ்சாப் இலையை மருந்தாகப் பயன்படுத்தலாம்



நரம்பு மண்டலம் தொடாபான பாதிப்புக்களுக்கு கஞ்சாப் இலையை மருந்தாகப் பயன்படுத்த முடியும் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
கஞ்சா இலைகளை பைப்களின் மூலம் புகைப்பதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
23 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கனேடிய மருத்துவ சஞ்சிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
கஞ்சா இலைகளின் புகையை உரிஞ்சக் கூடிய வகையிலான ஓர் கருவி தயாரிக்கப்பட்டு மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்

புள்ளிமான் கதை


ஒரு காட்​டில் இரண்டு புள்ளி மான்கள் இருந்தன. பார்ப்பதற்கு இரண்​டும் ஒரே மாதிரி​யாக இருக்​கும். இணை பிரி​யாத நண்பர்க​ளாக இருந்தன. சேர்ந்தே சாப்பி​டும். எங்கு சென்றா​லும் சேர்ந்தே​தான் செல்​லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்க​ளால் விளை​யாட முடிய​வில்லை. மழை நின்ற பிறகு​தான் வெளியே செல்ல முடிந்தது. இன்​னும் மழை பெய்​யுமா என்று இரண்டு மான்க​ளும் மேலே பார்த்தன. அப்போது​தான் மேகத்​திற்​குள்ளி​ருந்து வெளியே வந்தது சூரியன்.
அப் ​போது மான்கள் இரண்​டும் சூரிய​னைப் பார்த்து, ‘சூரியனே, இன்​னும் மழை வருமா?’ என்று கேட்டன. அதற்கு சூரியன், ‘அது​தான் நானே வந்து​விட்​டேனே, இனி எப்படி மழை வரும்?’ என்றது.
பிறகு, சூரியன் மான்க​ளைப் பார்த்து சிரித்தது.
ஒரு மான் கேட்டது, ‘எங்க​ளைப் பார்த்து ஏன் சிரிக்கி​றாய் சூரியனே?’
‘நீங்கள் இருவ​ரும் ஒரே மாதிரி​யாக இருக்கி​றீர்கள்! அது​தான் எனக்​குச் சிரிப்பு வந்து​விட்டது! தவ​றாக எடுத்​துக்​கொள்​ளா​தீர்கள். நீங்கள் யார்?’
‘நாங்கள் ​தான் அழ​கான இரண்டு புள்ளி மான்​கள். நாங்கள் இருவ​ரும் நண்பர்கள். நாங்கள் எப்போ​தும் ஒற்றுமையாகத்​தான் இருப்​போம்’ என்றன புள்ளி மான்கள்.
சூரியன் கேட்டது: ‘மிக​வும் நல்​லது! உங்க​ளில் யார் திறமை மிக்கவர்கள்?’

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சுந்தர். சி





நகைச்சுவை, கவர்ச்சி இவை இரண்டையும் கலந்து, கலக்கலான படங்களை கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. இயக்குநராக இருந்த சுந்தர் ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக தலையெடுத்தார். 
அந்த படத்தின் வெற்றி சுந்தர்.சியை ஒரு முழு நடிகராகவே மாற்றி விட்டது. இயக்குவதை நிறுத்திய சுந்தர்.சி, தொடர்ந்து பல இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.
கடைசியாக ‘ரெண்டு’ படத்தை இயக்கிய சுந்தர், தலைநகரம், வீராப்பு, சண்ட, ஆயுதம் செய்வோம், ஐந்தாம் படை, குரு சிஷ்யன் என அடுக்கடுக்கான படங்களில் ஹுரோவாக நடித்து வந்தார். 
இப்போது மறுபடியும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கி, அதில் ஹுரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். 
‘நகரம் மறுபக்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், நாயகியாக அனுயா நடிக்க, தமன் இசையமைக்கிறார். மேலும்

சூப்பர்ஸ்டாரும் தலயும் சந்திப்பு – சந்திரமுகி பார்ட் 2




சூப்பஸ்டாரும் தலயும் திடீரென சந்தித்துக்கொண்டனர் இதுதான் கொடாம்பாக்கத்தின் தற்போதய டாக். அப்படி என்னதான் விடயம் என ஆராய்ந்ததில் கிடைத்த தகவல் இதுதான்.
கன்னடத்தில் வெளிவந்து பெரும் கலெக்ஷனை அள்ளிய படம் ஆப்தமித்ரா பார்ட் 2. இது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும்.
அதிலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது பி.வாசுவின் விருப்பம். இதற்காக ரஜினியிடம் அவர் பேசிக் கொண்டேயிருக்கிறார் பல மாதங்களாக! 
சென்னையில் ஒரு ‘ப்ரிவியூ’ ஏற்பாடு செய்து அதை ரஜினியையும் பார்க்க வைத்தார். படத்தை பார்த்த ரஜினி பி.வாசுவை கட்டி தழுவி பாராட்டிவிட்டு காரேறி போய்விட்டார். 

இந்த நிலையில்தான் அஜீத்தை அழைத்து இதில் நீங்க நடிச்சா பெரிய ஹிட் ஆகும். உங்களுக்கும் நல்ல பேர் கிடைக்கும் என்றாராம். மேலும் செய்திகளிற்கு

அசின் இலங்கை சென்றது தவறு: திரிஷா


ஹிந்தி சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் ஊடகங்களுக்கு பரபரப்பு செய்திகள் வழங்க வேண்டும் என திரிஷாவுக்கு சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்களாம்.
 அதனால் ‘எனக்கு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்’, ‘அசின் இலங்கை சென்றது தவறு’ என திரிஷா பரபரப்பு பேட்டிகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மேலும் செய்திகளிற்கு

Monday, 30 August 2010

ஸ்லோவாக்கியாவில் 15 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி



ஸ்லோவாக்கியாவில் 15 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்லோவாக்கியாவின் தலைநகர் ப்ராடிஸ்லாவில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் கண் மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்.

Friday, 27 August 2010

வித்தைக்காரச் சிறுமி!


ஆகாஷ், ​​ பரமு,​​ கீர்த்தனா மூன்றுபேரும் பாலு வீட்டிற்கு வந்தனர்.​ இந்த நான்குபேரும் அந்த ஊர் பள்ளியில் ஒன்றாக ஐந்தாம் வகுப்பு படிப்பவர்கள்.​ காலையில் பள்ளிக்குப் போவதிலிருந்து மாலை விளையாடுவது வரை இணைபிரியாமல் இருக்கும் நண்பர்கள்.

இன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் நான்கு பேரும் சேர்ந்து பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடப் புறப்பட்டார்கள்.​ ஆற்றோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நந்தியா வட்டை மரத்தின் கீழே பூக்கள் உதிர்ந்துகிடந்தன பரமுவும்,​​ கீர்த்தனாவும் அவற்றைப் பொறுக்கினார்கள்.
‘நேத்தி நம்ம பள்ளிக்கூடத்துக்கு எதிருல வித்தைக்காரங்க சூப்பரா வித்தை செய்தாங்க இல்ல’ என ஆகாஷ் சொல்ல,​​ உடனே பாலு,​​ ‘ஆமாம்டா…​ அந்தச் சின்னப்பொண்ணும் அவ அப்பாவும் சின்ன வளையத்தில பூந்து எப்படி வந்தாங்கடா…’ கீர்த்தனா பூக்களை பொறுக்கியபடியே கேட்டாள். மேலும்.

ஹீரோயின் சென்டிமென்ட்


ஒரு கதாநாயகன் அல்லது கதாநாயகியை இயக்குநர்கள் தமது அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைப்பது தமிழ் சினிமாவில் முன்பு பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது அந்தப் பாணியை யாரும் பின்பற்றுவதில்லை. அதே நேரம் கௌதம் வாசுதேவ் மேனன் மட்டும் தனது படங்களில் இந்தப் பாணியை சற்றே மாற்றி பயன்படுத்துகிறார்.
ஒரு கதாநாயகியை அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தி வருகிறார். கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கிய “காக்க காக்க’ படத்தில் ஜோதிகா நடித்தார். பிறகு “வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். “பச்சைக் கிளி முத்துச்சரம்’ படத்திலும் நடித்தார். தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்ட “காக்க காக்க’ வில் அசின் நடித்தார். அதன் பின் “சென்னையில் ஒரு மழைக்காலம்’ என்ற பெயரில் சூர்யாவை வைத்து படம் ஆரம்பித்தார். இதிலும் அசின்தான் கதாநாயகி. முதல் கட்டப் படப்பிடிப்புடன் அந்தப் படம் கைவிடப்பட்டது. மேலும்.

Wednesday, 18 August 2010

யுத்தங்களில் கால்களை இழந்த மூன்று அமெரிக்கர்கள் செயற்கை கால்களுடன் 19 ஆயிரத்து 330 அடியைத் தொட்டனர்:-

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் வியட்நாம் நாடுகளில் நடைபெற்ற யுத்தங்களில் கால்களை இழந்த மூன்று அமெரிக்கர்கள் செயற்கை கால்களுடன் 19 ஆயிரத்து 330 அடி உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

26 வயதான நீல் டங்கன் இவர் 2005 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கால்களை இழந்தார்.


37 வயதான டொன் நெவின்ஸ், ஈராக் யுத்தத்தில் கால்களை இழந்தவர்.
62 வயதான கிர்க்பாவேர் 1969 ஆண்டில் வியட்நாமில் நடைபெற்ற போரில் கால்களை இழந்தார்.

இவர்கள் மூவரும் செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில் நடமாடி வருகின்றனர்..

இலங்கையில் 47 ஆயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் 47 ஆயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது.



நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக பணியகத்தி இணைப்பாளர் சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள் – கங்குலி


இலங்கை வீரர்களுக்கு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரீகம் தெரியாது. என்று முன்னாள் இந்திய அணியின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்;.
முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியா இலங்கை இடையே நடந்த போட்டியில் சேவாக்கை சதம் அடிக்க விடாமல் ரன்தீவ் நோ பால் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இலங்கை வீரர் தில்ஸ்ஸான், ரன்தீவிடம் நோபால் போட சொன்னது ஸ்டம்புக்கு கீழே உள்ள மைக்ரோ போன் மூலம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் அணியின் தலைவர் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாகவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கை அணித் தலைவர்; சங்ககரா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஒரு நோபால் கூட ரன்திவ் வீசவில்லை. நான் சதம் அடிப்பதை விரும்பாததால் வேண்டுமென்றே நோ பால் போட்டு வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்று சேவக் குற்றம் சாட்டினார். ரன்தீவின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் தலைவர்; சவுரவ் கங்குலி கூறியதாவது: விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். வெற்றி பெறும்போது ஆர்ப்பரிக்கும் அவர்கள் தோற்கும் நிலையில் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
சேவக் சதம் அடிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே நோபால் வீசி கிரிக்கெட்டை அவமதித்து விட்டார்கள். அணித் தலைவர்; மற்றும் சகவீரர்கள் சொல்லாமல் ரன்தீவ் அப்படி செய்திருக்க மாட்டார்.

எந்திரன் படப் பாடல்கள் தமிழ்ப்பாடல்களின் தரப்படுத்தல் வரிசையில் முதல் நான்கு இடங்களையும் பிடித்துள்ளன.



தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள எந்திரன் படப் பாடல்கள் தமிழ்ப்பாடல்களின் தரப்படுத்தல் வரிசையில்; முதல் நான்கு இடங்களையும் பிடித்துள்ளன.

மியூசிக்வேர்ல்ட் தரப்படுத்தலில் கிளிமாஞ்சாரே… பாடல் தொடர்ந்து இரு வாரங்களாக முதல் இடத்தில் உள்ளது. அரிமா அரிமா பாடல் இரண்டாவது இடத்திலும், காதல் அணுக்கள் மூன்றாம் இடத்திலும், இரும்பிலே ஒரு இதயம்… பாடல் நான்காம் இடத்திலும் உள்ளன.

மிர்ச்சி தரப்படுத்தலில் கிளிமாஞ்சாரோ முதல் இடத்திலும், மற்ற மூன்று பாடல்கள் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களிலும் உள்ளன.

இந்தியிலும் எந்திரன் பாடல்கள் புதிய சாதனைப் படைத்துள்ளன. வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியில் அரிமா அரிமா மற்றும் ரஹ்மான் பாடியுள்ள பாடல் பெரும் வெற்றியடைந்துள்ளன. ரஜினி நடித்த படம் ஒன்றின் பாடல்கள் இந்த அளவு இந்தியில் பேசப்படுவது இதுவே முதல்முறை. தெலுங்கில் ஏற்கெனவே பரபரப்பான விற்பனையில் உள்ளன எந்திரன் பாடல் இறுவட்டுக்கள்.

ஸ்ரேயாவுக்கு தமிழில் ஒரு படம்தான் கைவசம் உள்ளது



சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் படம் ரவுத்திரம். சிக்கு புக்கு படத்தை முடித்திருக்கும் ஸ்ரேயாவுக்கு கைவசம் இருக்கும் ஒரே தமிழ்ப் படம் இதுவாகும்.

இந்தப் படம் கைவிடப்பட்டதாக முன்பு செய்திகள் வெளியாயின. இது மற்ற யாரையும்விட ஸ்ரேயாவை ரொம்பவே பாதித்தது. காரணம், இது மட்டும்தான் அவருக்கிருந்த ஒரே வாய்ப்பு.

இந்நிலையில் கோ, சிங்கம் புலி படங்களில் நடித்துக்கொண்டே ரவுத்திரம் படத்தின் முதல் டெயூலில் ஜீவா கலந்து கொண்டார். இந்திப் படத்தில் பிஸியாக இருந்ததால் ஸ்ரேயா முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆகஸ்ட் 20-ம் திகதி அஜீத் நடிக்கும் 50வது படமான மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும் – வெங்கட் பிரபு:-



ஆகஸ்ட் 20-ம் திகதி அஜீத்  நடிக்கும் 50வது படமான மங்காத்தா ட்ரைலர் வெளியிடப்படும் என்று இயக்குநர்  வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தின் எடிட்டிங் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஆரம்பமானது. முதல் தினத்தன்றே படத்தின் ட்ரைலரை படமாக்கினார் வெங்கட் பிரபு.

க்ளவுட் நைன் மூவீஸின் பிரமாண்ட தயாரிப்பான மங்காத்தா ட்ரைலர், இதே நிறுவனத்தின் மற்றொரு படமான நான் மகான் அல்ல ரிலீஸின் போது வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Monday, 16 August 2010

மீண்டும் தமிழத் திரையுலகில் வாய்ப்புத் தேடுகிறாராம் த்ரிஸ்ஸா


பாராசூட்ல பறக்கும் போது கீழே நிக்கிறவன் எறும்பாதான் தெரிவான். ஆனால் அதுவே காற்று போய் கீழிறிங்கி வந்தால் ஏப்படி இருக்கும?; அந்த நிலைமைதான் இப்போது த்ரிஸாhவுக்கும்.


இந்தியில் இவர் நடித்த முதல் படமான கட்டா மீட்டா த்ரிஸ்ஸாவின் கனவுகளை கனவுகளாக்கிவிட்டது. அதனால் மீண்டும் தமிழ் பட வாய்ப்புகளை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாரார் என தமிழ் திரைப்பட உலகம் கூறுகிறது. அவரால் புறக்கணிக்கப்பட்ட கதாநாயகர்களில்; ஒருவரிடம் அன்றாடம் தொலைபேசியில் பேசுகிறாராம். அடுத்த பட வாய்ப்பு

இந்தியாவின் வெள்ள நிவாரணங்களை ஏற்பதில் பாகிஸ்தான் தயக்கம் காட்டுகிறது?


வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா வழங்குவதாக அறிவித்த 23 கோடி இந்திய ரூபா நிதியுதவியை ஏற்றுக்கொள்வதில் பாகிஸ்தான் தொடர்ந்தும் தயக்கம் காட்டிவருகிறது.

பாகிஸ்தானில் சமீபத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சுமார் 1,700 பேர் பலியாகினர் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸா முகம்து குரேஸியை, கடந்த வார 

2010 ஆண்டுக்கான அழகி போட்டியை நேபாளத்தில் நடத்துவதை மாவோஸ்ட்டுக்கள் விரும்பவில்லை



நேபாளத்தில் 2010 ஆண்டுக்கான அழகி போட்டி இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், போட்டியை நடத்தக் கூடாது என மாவோஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

எனினும் போட்டி ஏற்பாட்டாளர்கள் 18 ஆம் திகதிக்காக காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நோபாள பிரதமர் கடந்த மாதம் பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.அடுத்த பிரதமரை தெரிவுசெய்வதில் இழுப்பறி நிலை

கேட்பாரில்லை பார்ப்பாரில்லை கிழக்கில் பறிபோகும் நிலங்கள் திரிசடை




யுத்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் கிழக்கிலங்கையில் இதுவரை ஏழாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன என ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கைப் பொருளாதார வளம் மிக்க இக்காணிகள் சுற்றுலாத் துறை அபிவிருத்தி, உப்பு உற்பத்தி, வீதி அபிவிருத்தி, உயிரியல் மையம், அன்னாசிப் பழச் செய்கை, மீள்குடியேற்றம், மகாவலி அபிவிருத்தி, இறால் வளர்ப்பு, நட்சத்திர ஹோட்டல் போன்ற அபிவிருத்தி பணிகளுக்கென சுவீகரிக்கப்பட்டு வெளியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் விசனிக்கப்படுகின்றது.


இன நல்லிணக்கம், புரிந்துணர்வு, மீள் நிர்மாணம் எனக் கூறிக் கொண்டு ஆரவாரமின்றி சிறுபான்மை சமூகங் களின் நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன எனச் சமூக நேயர்கள் உரிமைக் குரல் எழுப்புகின்றனர்.

இந்நிலையில் இதுவரை இடம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் காணி அபகரிப்பு குறித்த தரவுகள் வருமாறு: திருமலை மாவட்டம் இறக்கக்கண்டி பிரதேசத்தில் 1500 ஏக்கர் குச்சவெளி பிரதேசத்தில் 1400 ஏக்கர், கந்தளாய்ப் பிரதேசத்தில் 1500 ஏக்கர் மொத்தமாக 4,400 ஏக்கர் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பகுதியில் 03 ஏக்கர் புனானை பகுதியில் 1500 ஏக்கர் காயன்கேணி பகுதியில் 300 ஏக்கர் சுங்கான்கேணி பகுதியில் 50 ஏக்கர் சேத்துக்குடா பகுதியில் 50 ஏக்கர் மொத்தமாக 2903 ஏக்கர் இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 1956 ஆம் ஆண்டு முதல் 1900 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன எனவும் 

ஆஸ்திரேலியத் தேர்தலில்… – முதல் தமிழ்ப் பெண்

எட்டு வயதுக் குழந்தையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்த பிராமி ஜெகனுக்கு இப்போது 30 வயது! இதில் ஆச்சர்யக் குறிக்கு என்ன வேலை என்கிறீர்களா? இந்தப் பெண்மணி இன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மேலவைக்கு (செனட்) போட்டியிடுகிறார்!
பொதுவாக, புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வரும் தமிழர்கள், அரசியல்
அமைப்புகளில் அதிகம் பங்கேற்பதில்லை. பொது அமைப்புகளில் பணியாற்ற விரும்பினால், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பார்கள்… கோயில் கட்டுவார்கள். அவ்வளவுதான் ஆனால், தமிழ்ப் பெண் ஒருவர், வெள்ளைக்காரர்கள் மட்டுமே போட்டியிடும் பொதுத் தேர்தலில், அவர்களுக்கு சமமாக அரசியல் களம் காண்பது ஆச்சர்யம்தானே!
‘கிரீன்ஸ் கட்சி’யின் சார்பாகப் போட்டியிடும் பிராமி ஜெகனின் தந்தை அருணாசலம் ஜெகன், சிவில் இன்ஜினீயர். அம்மா கிருஷ்ணா, ஆசிரியை. 1988-ம் ஆண்டு குடும்பத்துடன் ஆஸ்திரேலியா வந்தவர்கள். சிட்னியில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்’ பட்டப் படிப்பை முடித்து, மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ‘மெக்குவாரி வங்கி’யில் பணியில் சேர்ந்தார் பிராமி ஜெகன். பின்னர், உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மார்கனில்