ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் இருந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். இணை பிரியாத நண்பர்களாக இருந்தன. சேர்ந்தே சாப்பிடும். எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகுதான் வெளியே செல்ல முடிந்தது. இன்னும் மழை பெய்யுமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போதுதான் மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன்.
அப் போது மான்கள் இரண்டும் சூரியனைப் பார்த்து, ‘சூரியனே, இன்னும் மழை வருமா?’ என்று கேட்டன. அதற்கு சூரியன், ‘அதுதான் நானே வந்துவிட்டேனே, இனி எப்படி மழை வரும்?’ என்றது.
பிறகு, சூரியன் மான்களைப் பார்த்து சிரித்தது.
ஒரு மான் கேட்டது, ‘எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் சூரியனே?’
‘நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அதுதான் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்?’
‘நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளி மான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள். நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருப்போம்’ என்றன புள்ளி மான்கள்.
சூரியன் கேட்டது: ‘மிகவும் நல்லது! உங்களில் யார் திறமை மிக்கவர்கள்?’
No comments:
Post a Comment