Monday, 16 August 2010

கேட்பாரில்லை பார்ப்பாரில்லை கிழக்கில் பறிபோகும் நிலங்கள் திரிசடை




யுத்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் கிழக்கிலங்கையில் இதுவரை ஏழாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன என ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கைப் பொருளாதார வளம் மிக்க இக்காணிகள் சுற்றுலாத் துறை அபிவிருத்தி, உப்பு உற்பத்தி, வீதி அபிவிருத்தி, உயிரியல் மையம், அன்னாசிப் பழச் செய்கை, மீள்குடியேற்றம், மகாவலி அபிவிருத்தி, இறால் வளர்ப்பு, நட்சத்திர ஹோட்டல் போன்ற அபிவிருத்தி பணிகளுக்கென சுவீகரிக்கப்பட்டு வெளியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் விசனிக்கப்படுகின்றது.


இன நல்லிணக்கம், புரிந்துணர்வு, மீள் நிர்மாணம் எனக் கூறிக் கொண்டு ஆரவாரமின்றி சிறுபான்மை சமூகங் களின் நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன எனச் சமூக நேயர்கள் உரிமைக் குரல் எழுப்புகின்றனர்.

இந்நிலையில் இதுவரை இடம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் காணி அபகரிப்பு குறித்த தரவுகள் வருமாறு: திருமலை மாவட்டம் இறக்கக்கண்டி பிரதேசத்தில் 1500 ஏக்கர் குச்சவெளி பிரதேசத்தில் 1400 ஏக்கர், கந்தளாய்ப் பிரதேசத்தில் 1500 ஏக்கர் மொத்தமாக 4,400 ஏக்கர் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பகுதியில் 03 ஏக்கர் புனானை பகுதியில் 1500 ஏக்கர் காயன்கேணி பகுதியில் 300 ஏக்கர் சுங்கான்கேணி பகுதியில் 50 ஏக்கர் சேத்துக்குடா பகுதியில் 50 ஏக்கர் மொத்தமாக 2903 ஏக்கர் இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 1956 ஆம் ஆண்டு முதல் 1900 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன எனவும் 

No comments:

Post a Comment