ஒரு கதாநாயகன் அல்லது கதாநாயகியை இயக்குநர்கள் தமது அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைப்பது தமிழ் சினிமாவில் முன்பு பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது அந்தப் பாணியை யாரும் பின்பற்றுவதில்லை. அதே நேரம் கௌதம் வாசுதேவ் மேனன் மட்டும் தனது படங்களில் இந்தப் பாணியை சற்றே மாற்றி பயன்படுத்துகிறார்.
ஒரு கதாநாயகியை அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தி வருகிறார். கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கிய “காக்க காக்க’ படத்தில் ஜோதிகா நடித்தார். பிறகு “வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். “பச்சைக் கிளி முத்துச்சரம்’ படத்திலும் நடித்தார். தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்ட “காக்க காக்க’ வில் அசின் நடித்தார். அதன் பின் “சென்னையில் ஒரு மழைக்காலம்’ என்ற பெயரில் சூர்யாவை வைத்து படம் ஆரம்பித்தார். இதிலும் அசின்தான் கதாநாயகி. முதல் கட்டப் படப்பிடிப்புடன் அந்தப் படம் கைவிடப்பட்டது. மேலும்.
No comments:
Post a Comment