Thursday, 2 September 2010

உண்மையின் பரிசு!


காட்டு ராஜா சிங்கத்தின் பிறந்தநாளையட்டி காடே விழாக்கோலம் கொண்டிருந்தது. இரவில் ஆடலுக்குப் பேர் போன மயிலின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புகழ்பெற்ற அழகு மயிலின் நடனத்தைக் காண எல்லா விலங்குகளும் ஆவலுடன் காத்திருந்தன. காட்டுக்கு நடுவே மேடை அமைக்கப்பட்டது. சரியான நேரத்தில் மயில் வந்திறங்கியது. ஆனால், ஏனோ அதன் முகம் உற்சாகத்தை இழந்திருந்தது. மயிலின் முகவாட்டத்தைக் கண்ட முயல் நெருங்கி வந்து காரணம் விசாரித்தது. ‘முயல் நண்பனே… என் தோகையில் ஓர் இறகு விழுந்துவிட்டது. இந்த நிலையில் என் தோகையை விரித்தால் கண்களில்..
ஒன்று குறைவாக, அசிங்கமாகத் தோன்றுமே… நான் எப்படி ஆடுவேன்?’ என்று வருத்தத்துடன் சொன்னது. இதைக் கேட்ட முயல், ‘அடடே! ஒரு மயிலிறகு கீழே கிடைத்தது. அது உன்னுடையதுதானா… கொஞ்சம் இரு எடுத்து வருகிறேன்’ என்று கூறிச் சென்றது. கையில் ஓர் அழகான மயிலிறகுடன் வந்த முயல் அதை மயிலிடம் தந்து, ‘இதை உன் தோகையில் தைத்துக்கொண்டு நடனமாடு’ என்றது. மயிலின் முகம் பிரகாசமானது. அதை வாங்கி தன் தோகையில் தைத்துக்கொண்டு சந்தோஷமாக நடனமாடியது. மேலும்

No comments:

Post a Comment