Thursday, 16 September 2010

தேசிய விருது பெற்ற பாண்டிராஜன் எமது இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி!



நேற்றயதினம் இந்திய திரையுலகின் மிகஉயரிய விருதான தேசியவிருது பெறுபவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இம்முறையும் தமிழ் திரையுலகம் சபர்பாக நான்கு விருதுகள் கிடைக்கப்பட்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக பாண்டிராஜனின் இயக்கத்தில் வெளிவந்த "பசங்க" திரைப்படம் மூன்று விருதுகளைப்பெற்றிருக்கின்றது.

2009ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படமாக "பசங்க" திரைப்படம் ஒரு விருதினையும், இத்திரைப்படத்தில் முதல் நிலை கதாபாத்திரங்களில் நடித்த அன்புக்கரசு மற்றும் ஜீவா ஆகியோர் சிறந்க குளந்தை நட்சத்திரங்களாகவும், சிறந்த வசனகர்த்தாவாக இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதிய பாண்டிராஜனும் தேசிய விருதினை பெற்றிருக்கின்றார்கள்.

இவ்வாறாக தனது படைப்பின் மூலம் தமிழ் திரையுலகினை பெருமைப்படுத்திய பாண்டிராஜன் எமது இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தனது "பசங்க" திரைப்படம் வழர்ந்த விதம் பற்றி விரிவாக செல்லியிருக்கிறார்.

அது மட்டுமன்றி இலங்கை பற்றியதான தனது நிலைப்பாட்டினையும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்த சுவாரஸ்யமான நேர்கானலை இங்கே அழுத்தி நீங்கள் காணலாம்.

No comments:

Post a Comment