Friday, 3 September 2010

மகிந்தவின் வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபாய்! செலவு கட்டுபடுத்தப்பட்டிருந்தால் வன்னி மக்களுக்கு ‐ 1500 வீடுகள் அடங்கிய கிரமத்தை அமைத்திருக்கலாம்


 இலங்கை சனநாயக சோஸலிசக் குடியரசின் மேதகு ஜனாதிபதியாக 2006ம் ஆண்டு மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனாதிபதியின் பாவனைக்காக இருந்த வாகனங்களின் பெறுமதி 30,910,000 ரூபாவாகும்.  (மூன்று கோடியே ஒன்பது லட்சத்து பத்தாயிரம்) அது 2009ம் ஆண்டு இறுதியில் (இருநூற்றி நாற்பத்தி ஒரு கோடியே மூன்று லட்சத்து நாற்பத்தி ஆறாயிம்) 2,41,346,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த நான்கு வருடங்களில் ஜனாதிபதிக்கு 2,379,436,000 ரூபாய் பெறுமதியான வாகனத் தொகுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வாகன தொகுதிக்காக வழங்கப்பட்ட நிதி பின்வருமாறு,
2005 (வருடம் முடியும்போது) 30,910,000 ரூபாய்
2006ல் விலைக்கு வாங்குதல் 1,290,899,000 ரூபாய்
2007ல் விலைக்கு வாங்குதல் 11,095,000 ரூபாய்
2009ல் விலைக்கு வாங்குதல் 173,499,000 ரூபாய்
இந்த தகவலகள் அனைத்தும் நிதியமைச்சின் 2009ம் ஆண்டறிக்கையிலேயே வெளியாகியுள்ளது. மேலும் செய்திகள்


No comments:

Post a Comment