Friday, 10 September 2010

சிரஞ்சீவியின் 150வது படம் – தயாரிக்கின்றார் மகன்!



தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, அரசியல் கட்சி துவங்கியதுமே, சினிமாவுக்கு டாடா காட்டி விட்டார். இருப்பினும் அவரது ரசிகர்களின் தொடர் வேண்டுகோளுக்காக மறுபடியும் அரிதாரம் பூச தயாராகி விட்டாராம்.
தெலுங்கு எந்திரன் இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் நடைபெற்ற போது, பாடல் காட்சிகளை பார்த்த சிரஞ்சீவி, “ரஜினியை பார்த்து தனக்கும் நடிக்க ஆசை வந்துவிட்டது” என்று சொன்னர்.
அது சும்மா மேடை பேச்சுக்காகதான் என்று நினைத்தால், இப்போது உண்மையாகவே நடிக்க துவங்கிவிட்டாராம். அதுவும் தனது மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கப்போகும் படத்தில் நடிக்கப்போகிறாராம். 
சிரஞ்சீவியின் 150வது படமான இப்படம், சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகப்போகிறதாம்.  மேலும் செய்திகளுக்கு

No comments:

Post a Comment