Thursday, 2 September 2010

அக்கறை - நீதிக் கதை


ராமு என்ற சுட்டி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெரிந்தவர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார். ராமுவுக்கு வாழைப்பழம் ஒன்றை கொடுத்து ‘சாப்பிடு’ என்றார். அவரிடமிருந்து வாங்கிய ராமு பழத்தை தொட்டுப் பார்த்தான். சற்று ‘கொழ கொழ’ வென்று இருந்தது. ராமுவுக்கு அதை சாப்பிட விரும்பவில்லை.
ராமு வீட்டிற்கு வந்து அப்பாவிடம் அந்தப் பழத்தை கொடுத்தான். ‘நீ சாப்பிடு, உனக்குத் தானே கொடுத்தார்?’ என்றார் அப்பா.
‘எனக்கு இப்பொழுது பசிக்கவில்லை. நீங்களே சாப்பிடுங்கள்’ என்றான் ராமு.
தந்தை பழத்தைப் பார்த்தார். அவருக்கும் பிடிக்கவில்லை. சமையலறையில் இருந்த மனைவியை அழைத்தார்.
‘இந்தா பழம்… நானே சாப்பிடுவேன்… ஆனால் எனக்குப் பசியில்லை’ என்று கூறி தன் மனைவி கையில் வைத்துவிட்டு நகர்ந்தார்.
மனைவி பழத்தை வாங்கிக் கொண்டாள். வாங்கிய பின்புதான் பழத்தின் நிலையை தெரிந்து கொண்டாள். அப்பழத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று யோசித்தாள். அப்பொழுது வீட்டு வேலைக்காரி வந்தாள்.
‘வேலாயி இங்கே வா… நீ ரொம்ப களைப்பாக இருக்கிறாய். இந்தப் பழத்தை சாப்பிடு’ என்றாள். மேலும்

1 comment:

  1. அறிவு ரீதியான நல்ல குட்டிக் கதை

    ReplyDelete