விகாபுர நாட்டை ஒட்டிய அடர்ந்த காட்டில், வீரபத்திரர் என்ற கிழவரும், மிக அழகான பதினாறு வயது நிரம்பிய சந்திரஹாசினி என்ற அவருடைய பேத்தியும், ஒரு குடிசை அமைத்து வசித்து வந்தனர்.
நாம் தன்னந்தனியாக காட்டில் ஏன் வசிக்க வேண்டும் என்று சந்திரஹாசினி அடிக்கடி தாத்தாவை கேட்பதுண்டு. பலமுறை பதில் சொல்லாத அவர், ஒருநாள் அந்த உண்மையைக் கூறினார். மாளவிகாபுரநாட்டு மன்னரான தீரசிம்மனிடம் ரதம் ஓட்டுபவராக அவர் வேலை செய்து வந்தார்.
ஒருமுறை தீரசிம்மனுக்கும், அயல்நாட்டு அரசனுக்கும் நிகழ்ந்த போரில், மன்னருடைய ரதத்தை தாத்தா போர்க்களத்தில் செலுத்திக் கொண்டிருந்தபோது, எதிரியின் ஈட்டி ஒன்று தீரசிம்மனை தாக்கிக் காயப்படுத்திவிட்டது.
போரின் இறுதியில் தீரசிம்மன் வென்றாலும், ரதம் சரியாக ஓட்டாததால் தான் ஈட்டி தன் மீது பட்டது என்று கருதி, தீர விசாரிக்காமல் அவரை நாடு கடத்தி விட்டார். அப்போதிலிருந்து தாத்தா, தன் பேத்தியுடன் காட்டில் வசிக்கிறார்.
கதையின் தொடர்ச்சி எங்க இருக்குன்னு தெரியலையே..முழுப்பதிவா போடுங்க..
ReplyDelete